யாழ்ப்பாணம் மானிப்பாயில் வயல் கிணற்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து காவல்துறையினர் சடலத்தை கிணற்றிலிருந்து மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் ஆனந்தா வீதி பெரியபுலம் மானிப்பாயைச் சேர்ந்த 20 வயதான லதாரூபன் ஷாலினி என உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவரது மரணத்திற்கு காதல் விவகாரம் காரணமாக இருக்கலாம் என அக்கிராமத்தை சேர்ந்த சிலர் கூறுகின்ற போதிலும் இதில் மர்மம் நிலவுவதாகவும், இது கொலையாக இருக்கலாம் என்றும் சிலர் கூறுகின்றனர்.
Title :
யாழ் மானிப்பாய் பகுதியில் வயல் கிணற்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது!
Description : யாழ்ப்பாணம் மானிப்பாயில் வயல் கிணற்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து காவல்துறையின...
Rating :
5