வெளிநாடுகளுக்கான வீசாக்களை பெற்றுத்தருவதாக கூறி பல வருடங்களாக பண மோசடியில் ஈடுபட்டு வந்த ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த நபர் கொள்ளுபிடி பிரதேசத்தில் அலுவலகம் ஒன்றை நடத்தி
சென்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். நேற்று பிற்பகல் அந்த அலுவலகத்தில் இருந்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபருக்கு எதிராக 2003 ஆம் ஆண்டில் இருந்து 2010 ஆம் ஆண்டு வரை 27 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
பல வருடஙகளாக அவர் எவ்வாறு மறைமுகமாக இந்த தொழிலை முன்னெடுத்தார் என்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
வீசா பெற்றுத்தருவதாக கூறி சந்தேக நபர் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பணத்தை பெற்றுக் கொண்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
Title :
இலங்கையில் வீசா பெற்றுத்தருவதாக கூறி பண மோசடி செய்த நபர் கைது!
Description : வெளிநாடுகளுக்கான வீசாக்களை பெற்றுத்தருவதாக கூறி பல வருடங்களாக பண மோசடியில் ஈடுபட்டு வந்த ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய...
Rating :
5