பிரித்தானியாவில் ஷேன் ஜென்கின்(வயது 33) என்ற நபர், தனது அன்புத் துணைவியின் டினா நாஷ் என்பவரை கொடூரமாக தாக்கி அந்த பெண்ணின் கண்களை குருடாக்கி விட்டான்.இவர்களுக்கு 13 மற்றும் 3 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். சம்பவம் நடந்த தினத்தன்று ஷேன், டினாவை
கொடுமையாக தாக்கி அவளது கண்களை குருடாக்கினான், மேலும் அவளது கழுத்தை நெறித்து கொலை செய்ய துணிந்தான்.
இதுகுறித்து டினா கூறுகையில், என்னிடமிருந்து எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டவன் இறுதியில் என் கண்களையும் பறித்து விட்டான் என்று கூறினார்.
ஒரு கண்ணிலாவது பார்வையைக் கொண்டு வந்துவிட வேண்டும் என்று மருத்துவர்கள் முயன்ற போதும், கண்களின் நரம்புகள் சிதைவுண்டதால் பார்வை பெற வழியில்லாமல் போயிற்று.
இதனையடுத்து ஷேன்னை காவல்துறையினர் கைது செய்தனர்.
Title :
பிரித்தானியாவில் மனைவியை கொடுமையாக தாக்கி குருடாக்கிய கணவர் கைது(படங்கள்)!
Description : பிரித்தானியாவில் ஷேன் ஜென்கின்(வயது 33) என்ற நபர், தனது அன்புத் துணைவியின் டினா நாஷ் என்பவரை கொடூரமாக தாக்கி அந்த பெண்ணின் கண்களை குருடாக்கி...
Rating :
5