
மொனராகலை - 14ம் கட்டை கும்புக்க பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் மகள் ஆகியோர் வெட்டுக் குத்துக்கு இலக்காகி அதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.நேற்று 1ம் திகதி இரவு 9 மணிக்கு இந்த சம்பவம் இடம்பெற்றதாக
மொனராகலை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் 58 வயதுடைய தந்தையும் 30 வயது மகளும் உயிரிழந்ததோடு தாய் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று 2ம் திகதி மொனராகலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
சந்தேகபருக்கும் கொலை செய்யப்பட்ட குடும்பத்திற்கும் இடையில் காணப்பட்ட பிரச்சினையே கொலைக்குக் காரணம் என தெரியவந்துள்ளது.
Title :
மொனராகலை - 14ம் கட்டை கும்புக்க பகுதியில் தந்தை, மகள் வெட்டிக் கொலை! தாய் படுகாயம்!!
Description : மொனராகலை - 14ம் கட்டை கும்புக்க பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் மகள் ஆகியோர் வெட்டுக் குத்துக்கு இலக்காகி அதில் இருவ...
Rating :
5