
கன்னியாகுமரி மாவட்டத்தில் 17 வயது இளைஞன் ஒருவனை திருமணமான பெண் கடத்திச் சென்றுள்ள சம்பவம் அம்மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரை அடுத்த முதலார் ஓடவிளை ஊரில் ரவி, மனைவி விஜி வசித்து வந்தனர்.
இவர்கள் பக்கத்து வீட்டில் வசித்து வரும் 17 வயது இளைஞன் ஒருவன் கட்டிட வேலைக்கு சென்று வந்தான்.ரவி இல்லாத நேரத்தில் சிறுவனை அழைத்து வந்து உல்லாசமாக இருப்பதை விஜி வாடிக்கையாக வைத்திருந்திருக்கிறார். இதனை ரவி அவ்வப்போது கண்டித்தும் இருந்திருக்கிறார்.
இந்நிலையில் விஜி நேற்று முன்தினம் அனைவரும் தூங்கிய பிறகு பக்கத்து வீட்டு சிறுவனோடு ஒடிவிட்டார். அவர் வீட்டில் இருந்த 6 பவுன்நகை மற்றும் ரூ. 5,000 பணத்தையும் களவாடி சென்றுள்ளார்.இது குறித்து விஜியின் கணவர் ரவியும் சிறுவனின் தந்தையும் திருவட்டார் காவல்நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர்.
சிறுவனின் தந்தை கொடுத்த புகாரில், உல்லாசமாக இருப்பதற்காகவே தமது மகனை விஜி கடத்திச் சென்றுவிட்டார் என்று கூறியிருக்கிறார்.சிறுவனை ஒரு பெண் கடத்திச் சென்ற சம்பவம் திருவட்டார் வட்டாரத்தில் பரபரப்பான விடயமாகப் பேசப்படுகிறது.
Title :
இந்தியாவில் பதினேழு வயது இளைஞனை தவறான உறவுக்காக கடத்திய பெண்!!
Description : கன்னியாகுமரி மாவட்டத்தில் 17 வயது இளைஞன் ஒருவனை திருமணமான பெண் கடத்திச் சென்றுள்ள சம்பவம் அம்மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கன்னியா...
Rating :
5