இவர் ஒரு புதுமையான தகப்பனாக உள்ளார். பருவம் அடைகின்ற வரை மகளை தொடர்ந்து14 வருடங்கள் அறை ஒன்றுக்குள் பூட்டி சிறைப்படுத்தி வந்திருக்கின்றார் சவூதி அரேபியரான தகப்பன் ஒருவர். உள்நாட்டு பொலிஸார் இவரை கைது செய்து உள்ளனர்.மகளுக்கு இப்போது 20 வயது வரை
ஆகி விட்டது. . இருந்தாலும் அறைக்குள் தொடர்ந்தும் அடைத்து வைத்திருக்கப்படுகின்றார். இத்தகப்பனின் நோக்கம் என்ன? என்பதை கண்டறிகின்றமையில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
சவூதி அரேபிய தினசரி பத்திரிகையான Sharq இச்செய்தியை பிரசுரித்து உள்ளது. தகப்பனின் செயல் மிகவும் பாரதூரமான குடும்ப வன்முறை என்று விபரித்து உள்ளது.சவூதியின் Al Madinah மாகாணத்தில் உள்ள Yanbu என்கிற நகரத்தில் இந்நபரின் வீட்டை பொலிஸார் முற்றுகை இட்டு இருந்தனர். 20 வயது வரை உடைய யுவதி ஒருவர் இவ்வீட்டில் அறை ஒன்றுக்குள் பூட்டப்பட்டு இருக்கின்றமையையும், இந்த அறைக்கு படுக்கை, குளிர் சாதனப் பெட்டி, மலசலகூடம், தொலைக்காட்சி பெட்டி ஆகியன உட்பட ஏனைய வசதிகள் பல செய்து கொடுக்கப்பட்டு இருந்தமையையும் கண்டு கொண்டனர்.
Title :
சவுதியில் பருவமடையும் வரை மகளை வீட்டில் பூட்டி வைத்த சவுதித் தந்தை!
Description : இவர் ஒரு புதுமையான தகப்பனாக உள்ளார். பருவம் அடைகின்ற வரை மகளை தொடர்ந்து14 வருடங்கள் அறை ஒன்றுக்குள் பூட்டி சிறைப்படுத்தி வந்திருக்கின்றார் ச...
Rating :
5