எல்ல - கித்தலவத்த பிரதேச பாடசாலை வளாகத்தினுள் கற்களால் தாக்கப்பட்டு காயமடைந்த 6 வயதான மாணவன் உயிரிழந்துள்ளார்.கடந்த 4ஆம் திகதி பெண்ணொருவரினால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் கற்பிரயோகத்தில் காயமடைந்து
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவன் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
கித்தலவத்த பிரதேசத்தைச் சேர்ந்த சிவகுமார் மனோஜ் என்கின்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ள பெண் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர்.
Title :
கித்தலவத்த பிரதேசத்தைச் சேர்ந்த மாணவன் கற்களால் தாக்கப்பட்டு உயிரிழப்பு!
Description : எல்ல - கித்தலவத்த பிரதேச பாடசாலை வளாகத்தினுள் கற்களால் தாக்கப்பட்டு காயமடைந்த 6 வயதான மாணவன் உயிரிழந்துள்ளார்.கடந்த 4ஆம் திகதி பெண்ணொருவரினா...
Rating :
5