
மட்டக்களப்பு, திக்கோடைக் கிராமத்தில் பாம்பு தீண்டியதில் பெண்ணொவருவர் காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்றிரவு எட்டு மணியளவில் இடம்பெற்றுள்ளது.
60 வயதான நடராஜா மனோரஞ்சிதமலர் என்பவரே பாம்புக்கடிக்கு இலக்காகி சிகிச்சை பெற்றுவருகின்றார்.
வீட்டு வாசலைக் கடந்து நடந்து வரும்பொழுதே பாம்பு தீண்டியுள்ளது. உடனடியாக சார்ஜர் லைற் உதவியோடு சுற்றுப்புறத்தில் தேடிப் பார்த்தபோது பெண்ணைக் கடித்த நெடுவளலைப் பாம்பு பதுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அது உடனடியாக தடியால் அடிக்கப்பட்டு கொல்லப்பட்டது. காயமடைந்த பெண்ணுடன் கொல்லப்பட்ட பாம்பும் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
பாம்புக் கடிக்குள்ளான பெண் முன்னதாக களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக அவசர சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்
Title :
மட்டக்களப்பில் பாம்பு தீண்டியதில் பெண்ணொருவர் காயம்
Description : மட்டக்களப்பு, திக்கோடைக் கிராமத்தில் பாம்பு தீண்டியதில் பெண்ணொவருவர் காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இ...
Rating :
5