இந்தியாவின் பஞ்சாபில், கள்ளக் காதலனுடன் உல்லாசமாக இருந்த போது, கையும் களவுமாக பிடிபட்ட பெண்ணை கைது செய்ய முடியாமல், பொலிசார் ஆறு மணி நேரம் போராடியுள்ளனர்.
பின் பொதுமக்கள் உதவியுடன் அப்பெண்ணை கைது செய்து, பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.
லூதியானா மாவட்டம், ஜோதேவால் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், நீண்ட நாட்களாக வெளியூரைச் சேர்ந்த நபர் ஒருவருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தார்.
வீட்டின் கதவை திறந்து வைத்து, அரை நிர்வாண நிலையில், இருவரும் அடிக்கடி கொஞ்சி குலாவுவது வழக்கம்.
இதனால், அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் வசிக்கும் மணமாகாத இளம் பெண்கள், பள்ளி செல்லும் மாணவியர் உட்பட, பலரும் தர்ம சங்கடத்திற்கு ஆளாகினர்.
மற்றவர்கள் பார்க்கும் வகையில் அசிங்கமாக நடக்க வேண்டாம் என, அப்பெண்ணிடம் பல முறை அப்பகுதி மக்கள் கூறியும், அவர் கேட்கவில்லை. அவர்களின் அசிங்கமான செயல்பாடுகள் தொடர்ந்தன.
இந்தநிலையில் நேற்று முன்தினம் கள்ளக் காதலனுடன் வீட்டில் தனிமையில் இருந்த பெண்ணை, அப்பகுதி மக்கள் கையும் களவுமாக பிடித்தனர்.
உடன், பொலிசுக்கும் தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து, கைது செய்ய முயன்ற போது, அந்த பெண் தன் மீதும், தன் கள்ளக் காதலன் மீதும் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டதோடு பொலிஸ் மற்றும் பொதுமக்கள் மீதும் ஊற்றினார்.
தன்னை பிடிக்க முயன்றால் தீயிட்டு கொளுத்தி விடுவேன் என மிரட்டினார். அத்துடன், வீட்டின் கதவை பூட்டிக் கொண்டார்.
இதனால், பொலிசார் செய்வதறியாது திகைத்தனர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்குப் பின், தீயணைப்பு துறையினருக்கு இரகசிய தகவல் கொடுக்கப்பட்டது.
அங்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள், வீட்டின் பின்புற ஜன்னல் வழியாக, உள்ளே சென்று அந்தப் பெண்ணையும், அவரின் கள்ளக் காதலனையும் மடக்கிப் பிடித்தனர்.
பின், அப்பகுதி பெண்கள் உதவியுடன், பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றனர். பொது இடத்தில், ஆபாசமாக நடந்து கொண்டது உட்பட, சில பிரிவுகளின் கீழ், அந்த பெண் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Title :
இந்தியாவில் கள்ளக் காதலனுடன் இருந்த பெண்ணை பிடிக்க 6 மணிநேரம் போராட்டம்
Description : இந்தியாவின் பஞ்சாபில், கள்ளக் காதலனுடன் உல்லாசமாக இருந்த போது, கையும் களவுமாக பிடிபட்ட பெண்ணை கைது செய்ய முடியாமல், பொலிசார் ஆறு மணி நேரம் ப...
Rating :
5