தம்புள்ளை பொலிஸ் பிரிவின், பன்னம்பிட்டிய பகுதியில் முச்சக்கர வண்டியொன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு சிறுமி ஒருவர் காயமடைந்துள்ளார்.
சம்பவத்தில் முச்சக்கரவண்டி சாரதி மற்றும் பின்னால் அமர்ந்து வந்த அவரது 8 வயது மகளும் காயமடைந்த நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் சாரதி உயிரிழந்ததோடு, சிறுமி வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவத்தில் உயிரிழந்த சாரதி, 35 வயதான அரநாயக்க பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் பிரேதப் பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன.
Title :
தம்புள்ளையில் முச்சக்கரவண்டி விபத்து தந்தை பலி,மகள் வைத்தியசாலையில்
Description : தம்புள்ளை பொலிஸ் பிரிவின், பன்னம்பிட்டிய பகுதியில் முச்சக்கர வண்டியொன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு ச...
Rating :
5