கனடாவில் 91 வயது பெண் ஒருவர், 67 ஆண்டுகளுக்கு முன் தொலைந்து போன தன்னுடைய மகளை சந்திக்க உள்ளார்.கனடாவில் கேல்கரி நகரில் வசித்து வரும் Bessie Sedor(வயது 91) என்ற பெண், கடந்த 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி தன்னுடைய மகளை விட்டு
பிரிந்தார்.
அன்று முதல் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி ஒரு விழாவை தன்னுடைய வீட்டில் கொண்டாடுவார். இந்த விழா ஏன் என்று நண்பர்கள் கேட்டால், சரியான பதில் எதுவும் கூறமாட்டார்.
இந்நிலையில் கடந்த மாதம் இவருடைய மகன் தன்னுடைய சகோதரி காணாமல் போனது குறித்து பேஸ்புக்கில் பதிவு செய்து இருந்தார்.
இதனையடுத்து தொலைபேசி அழைப்பொன்று வந்தது. அதில் நான் தான் தொலைந்து போன அந்த பெண் என்று நபர் ஒருவர் தகவல் கொடுத்தார்.
இந்த பெண்ணின் பிறந்த திகதி மற்றும் சில அடையாளங்களை சரிபார்த்த சகோதரர், இவர் தான் தொலைந்து போன தன்னுடைய சகோதரி என்பதை உறுதி செய்தார்.
இதனையடுத்து தன்னுடைய தாயை 67 ஆண்டுகளுக்கு பிறகு, வருகிற செப்டம்பர் மாதம் சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
Title :
கனடாவில் 67 ஆண்டுகளுக்கு முன் தொலைந்து போன மகளை சந்திக்க உள்ள தாய்!!
Description : கனடாவில் 91 வயது பெண் ஒருவர், 67 ஆண்டுகளுக்கு முன் தொலைந்து போன தன்னுடைய மகளை சந்திக்க உள்ளார்.கனடாவில் கேல்கரி நகரில் வசித்து வரும் Bessie...
Rating :
5